மறைந்த கணவரின் கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மேக்னா ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது தனது 8-வது திருமண நாளையொட்டி மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த ஆண்டுத் திருமண நாள் வெறும் தேதியல்ல, அது ஒரு உணர்வு. நீங்கள் அவரை கடவுளாகப் பார்த்தீர்கள்! நான் கனவிலும் நினைக்காத வகையில் என்னை ரஜினி சாருடன் நடிக்க வைத்துவிட்டீர்கள். இந்த வெற்றி, இந்த மைல்கல், இந்தத் திரைப்படம் என அனைத்தும் உங்களுக்கே சொந்தம்…” என்று பதிவிட்டுள்ளார்.
அது மட்டும் இல்லை அவரின் மகனின் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார் . இது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.








