ஆஸ்திரேலியாவில் மக்கள் கூட்டத்தின் மீது மோதிய கார் – இருவர் கவலைக்கிடம்
ஆஸ்திரேலியாவின் நியூகாசில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ரக்பி லீக் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நியூகாசில் நைட்ஸ் ரக்பி லீக் அணிக்கு பிரியாவிடை அளிப்பதற்காக தெருக்களில் கூடியிருந்த மக்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பத்துடன் தொடர்புடைய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்டதகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




