ஸ்பெயினுக்கு படையெடுக்கும் புலம்பெயர்ந்தோர் -24 மணிநேரத்தில் 2000 பேர் வருகை
ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,100இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நெரிசல் மிகுந்த படகுகளில் வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு ஏராளமான புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அவ்வாறு வந்தவர்களில் ஒரு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக கடல்சார் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமார் 1,500 ஆக இருந்த முந்தைய சாதனை எண்ணிக்கை இவ்விரு நாட்களில் முறியடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான படகுகள் எல் ஹியரோ தீவை El Hierro island வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவானது ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்கள் ஐரோப்பாவை அடைவதற்கான முக்கிய புள்ளியாக விளங்குகிறது.
புலம்பெயர்ந்தோர் வருகையை தொடர்ந்து இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் பெட்ரோ சான்செஸ், செனகல் மற்றும் காம்பியன் அதிகாரிகளுடன் இணைந்து வலுவான எல்லைக் கட்டுப்பாடுகள் உட்பட, புலம்பெயர்வு தொடர்பாக ஐரோப்பாவிற்கு ஒரு விரிவான அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.




