ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் – இரவில் விமானங்களை இடமாற்றும் பிரித்தானியா

இரவு நேரங்களில் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து விமானங்களை பாதுகாப்பதற்காக அவற்றை கொட்டகைக்கு மாற்றும் செயற்பாடுகளை பிரித்தானியாவின் ரோயல் ஏர் ஃபோர்ஸ் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஊடகங்கள் இன்று இந்த செய்தியை பிரசூரித்துள்ளன.

இருப்பினும் அந்த செய்திகளில் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை.

செய்தியின்படி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள விமானங்களைப் பாதுகாக்க ட்ரோன் எதிர்ப்பு வலைகளைப் பயன்படுத்தும் திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவின் நாசவேலை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகமும், உள்நாட்டு உளவு நிறுவனமான MI5உம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த தகவல் கசிந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், RAF லேக்கன்ஹீத் தளத்தில் “அங்கீகரிக்கப்படாத ட்ரோன் செயல்பாடு சந்தேகிக்கப்படுவதாக” அமெரிக்க விமானப்படை வீரர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்