உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மீண்டும் ‘வரி அஸ்திரத்தை’ கையிலெடுக்கும் ட்ரம்ப்: சீனா, இந்தியா உட்பட 14 நாடுகள் இலக்கு வைப்பு

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 நாடுகள் மற்றும் பொருளாதாரப் பிராந்தியங்களின் இறக்குமதிப் பொருட்களுக்கு புதிய வர்த்தக வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 நாடுகள் மற்றும் பொருளாதாரப் பிராந்தியங்களின் இறக்குமதிப் பொருட்களுக்கு புதிய வர்த்தக வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

உலகச் சந்தையில் மலிவான பொருட்களைக் குவிப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதாகக் குற்றஞ்சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சீனா, பங்களாதேஷ், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தாய்வான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை புதிய வர்த்தக வரி விதிப்புக்கான இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் சீனாவுக்கு அதிகபட்சமாக 20 சதவீத வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுக்கான வரி விகிதங்கள் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்டுள்ள வர்த்தக உடன்படிக்கைகளுக்கு அமைவாக நிர்ணயிக்கப்படவுள்ளன.

அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் மேற்கொண்ட எட்டு மாத கால விசாரணையின் பின்னரே இந்தப் புதிய வரி விதிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெளிநாடுகள் தமது தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து, சந்தைத் தேவையை விட அதிகமான பொருட்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளதுடன், தனது ஏற்றுமதிகள் போட்டித்தன்மையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய வரி விதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வராது. பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்கான கால அவகாசம் மற்றும் விசாரணை நடைமுறைகள் நிறைவடைந்த பின்னரே அமுல்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, புதிய வரி விதிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், அமெரிக்காவில் இறக்குமதிப் பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி