ஐரோப்பா

பிரான்ஸில் மற்றொரு சுற்று போராட்டத்திற்கு அழைப்பு

பிரான்ஸில் மற்றொரு சுற்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் பிரான்ஸின் பல நகரங்களில் பேரணியாக செல்லவும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

பாரிஸுக்கு வெளியே நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் 500,000 முதல் 700,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என உள்நாட்டு உளவுத்துறை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

அரசு ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களில் 17.5 சதவீதமானோர்  வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகக் கல்வி அமைச்சகம் கூறியுள்ள நிலையில், ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சுமார் 70,000 காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே அந்நாட்டில் இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி மக்ரோனுக்கு இந்த போராட்டங்கள் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்