களுத்துறையில் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு
களுத்துறை, நகோடாவில் உள்ள ஓர் உணவகத்தின் உரிமையாளர், இன்று காலை (9) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மனைவி, மேலதிக சிகிச்சைக்காக நகோடா போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவருக்கு […]







