புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற 05 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைவு
சட்டப்பூர்வ குடியுரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு அனுப்ப 05 நாடுகள் இணைந்து தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளன. இதற்கமைய குறித்த நாடுகள் ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்திட எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகளே மேற்படி தீர்மானத்தை எட்டியுள்ளன. இருப்பினும் திருப்பி அனுப்பும் மையங்களை அமைக்க எதிர்பார்க்கும் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. “திருப்பி அனுப்பும் மையங்களை நிறுவ வழிவகுக்கும் ஒரு ஒப்பந்தத்தை இந்த ஆண்டு மூன்றாம் நாடுகளுடன் […]





