உலகம்

வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 264 மில்லியன் டொலர்களை திரட்டிய பைடன்!

ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 264 மில்லியன் டொலர்களை திரட்டியதாக அறிவித்துள்ளது.

தேர்தல்கள் நெருங்கி வருகின்ற நிலையில், பிரச்சாரங்கள் முன்னெடுகப்பட்டு வருகின்றன. இதில் பைடனுக்கு ஆதரவானவர்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான நிதியை வெழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ஜூன் மாதத்தில் மட்டும் 127 மில்லியன் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விடயமானது ஜனாதிபதி பைடனின் பின்னால் உறுதியாக நிற்கும் ஆதரவாளர்களின் உறுதியான மற்றும் வளர்ந்து வரும் தளத்திற்கு ஒரு சான்று” என்று பிரச்சார மேலாளர் ஜூலி சாவேஸ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் மில்வாக்கியில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுவை ஏற்க உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சாரம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கான காலாண்டு நிதி திரட்டும் தொகையை இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்