ஐரோப்பா முக்கிய செய்திகள்

பெல்ஃபாஸ்ட் வன்முறை சம்பவம் – நாடுகடத்தும் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை!

பெல்ஃபாஸ்டில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த குடியேற்ற எதிர்ப்பு கலவரங்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை பிரித்தானிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

பெல்ஃபாஸ்டில் கத்திகுத்து கலவரத்திற்கு காரணமான   ஹாடி அலோடிட்,  செல்லுசெல்லுபடியாகும் விசா இல்லாமல் அயர்லாந்தில் இருந்து எல்லையை கடந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறான எல்லை கடப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரத்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு புகலிடம் கோருவோர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் செல்வதைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட டப்ளின் ஒழுங்குமுறையை பின்பற்றியது.

பாதுகாப்பு கோருவோர் தாங்கள் முதலில் வரும் நாட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியப்பின் இந்த விதிமுறை பிரித்தானியாவிற்கு பொருந்தாது.

கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் கீழ், புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்புவதற்கும் மீண்டும் அனுமதிப்பதற்கும் வழிவகுக்கும் ஒரு வகையான மாற்று ஒப்பந்தம் அயர்லாந்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் நடைமுறையில் செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து  ஒரே ஒரு புகலிடம் கோருவோர் மட்டுமே அயர்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

ஆக அயர்லாந்துடனான ஒப்பந்தம் தோல்வியடைந்துள்ளமை குறிப்படத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்