பொழுதுபோக்கு

குடிபோதையில் அஞ்சலியிடம் அத்துமீறிய பாலகிருஷ்ணா? பரபரப்பு வீடியோ

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. 63 வயதிலும் ஹீரோவாக நடித்து வரும் இவருக்கு ஆந்திராவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் பாலகிருஷ்ணா. அண்மையில் நடந்து முடிந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட நடிகை விசித்ரா, பால கிருஷ்ணா படத்தில் நடித்தபோது தான் பாலியல் சீண்டல் பிரச்சனையை எதிர்கொண்டதாக ஓப்பனாகவே கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்த நிலையில், தற்போது நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. அந்த வகையில் அஞ்சலி, நாசர், நேஹா ஷெட்டி, விஸ்வாக் சென் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகர் பாலகிருஷ்ணா.
அப்போது அவர் வாட்டர் பாட்டிலில் மது கொண்டு வந்திருந்ததாக கூறி வீடியோ காட்சிகள் சில வெளியாகி வைரலாகின.

அதேபோல் மேடையில் அருகில் நின்றுகொண்டிருந்த நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் மேடையில் நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்ட பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலரோ அவர்மீது ஆக்‌ஷன் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்