உலகம்

விசா கட்டணங்களை திடீரென உயர்த்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்

ஆஸ்திரேலியா அரசாங்கம் மாணவர் விசா விண்ணப்பக் கட்டணங்களை திடீரென அதிகரித்துள்ளது.

இதற்கமைய குறித்த கட்டணங்கள் 2000 டொலர்களில் இருந்து 2500 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் துணைப்பிரிவு  விசாவின் கீழ் தகுதி பெறும் ELICOS மாணவர்களுக்கென   தனி விலை நிர்ணய அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்து வரும் மாணவர் சேர்க்கை மற்றும் பல ELICOS படிப்புகளின் குறுகிய காலத் தன்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, கட்டணத்தை 2000 டொலர்களுக்கு கீழே குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் புதிய கட்டணங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கட்டணம் முன்னதாக 2000 டொலர்களாக இருந்த நிலையில் தற்போது 50 டொலரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த கட்டணத்தையே செலுத்துவார்கள் என்றும், பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து 745 டொலர்களை செலுத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தற்காலிக பட்டதாரி விசா  விண்ணப்பக் கட்டணம் மீண்டும் $4,600 டொலரில் இருந்து  $5,750 டொலராக உயர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் உள்விவகாரத் துறை அறிவித்துள்ள சமீபத்திய திருத்தத்தின்படி, பிரிட்ஜிங் விசா B-க்கான கட்டணம், முன்பு $190 டொலராக  இருந்தது, இப்போது $575 டொலராக  உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முன்பு $490 ஆக இருந்த ரெசிடென்ட் ரிட்டர்ன் (Resident Return)  விசாவின் கட்டணம் இப்போது $1,475 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டணம் முன்பு 985 டொலராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்