உலகம்

ஜப்பானில் மாயமாகியிருந்த விசேட தேவையுடைய சிறுவன் சடலமாக மீட்பு

ஜப்பானின் கொமாட்சு நகரில் உள்ள விசேட தேவையுடைய பாடசாலையொன்றில் இருந்து 10 வயதுடைய சிறுவன் மாயமாகியிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை கழிவறையை பயன்படுத்துவதற்கு அனுமதிகோரி வகுப்பறையை விட்டு வெளியேறிய நிலையில் மாயமாகியுள்ளார்.

பாடசாலையின் அவசரகால வெளியேற்றத்தின் வழியாக அவர் வெளியேறியிருக்கலாம்  என ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

பின்னர், அவரது காலணிகள் அருகிலுள்ள ஒரு நெல் வயலின் ஓரத்தில் இருந்து  கண்டெடுக்கப்பட்டன.

அருகில் இருந்த சிசிரிவி கமெராவை ஆய்வு செய்ததில் அவனுடைய தோற்றத்தை ஒத்த குழந்தையொன்று ஜுனிகடாகி நீர்வீழ்ச்சியை நோக்கி ஓடுவது தெரியவந்தது.

இதனையடுத்து மீட்புக்குழுவினர் குறித்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் தேடியபோது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவனது மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை எனக் கருதப்படுகிறது. இது, வழிதவறிச் செல்லும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்களை எடுத்துக்காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்