உலகயே திரும்பி பார்க்க வைத்த பீகார் திருமணம்
அரசியல்வாதி அனந்த் சிங்கின் மகளின் திருமணத்திலேயே இவ்வளவு பேர் கலந்துகொண்டுள்ளனர்.
நடாவாவில் நடந்த இந்த திருமணத்தில் 5 லட்சம் இனிப்புகள், 500 சமையல் கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக ஆறு ஹெலிபேடுகள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,000 கிலோ ஆட்டிறைச்சி உட்பட 150-க்கும் மேற்பட்ட வகை உணவுகளைக் கொண்ட உணவுப் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அலங்காரத்திற்காக சீனாவில் இருந்து மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வின் பிரம்மாண்டம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன், ஏற்பாட்டாளர்கள் திட்டமிடப்பட்டிருந்த குதிரைப் பந்தயத்தையும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தின் ஆறு முறை உறுப்பினராக இருந்த அனந்த் சிங் மீது 28 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிங் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளில் கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும்.



