Consent Preferences
இலங்கை செய்தி

பயணத்தின்போது எதிர்பாராது பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் சோகம்

பயணத்தின்போது எதிர்பாராது பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் சோகம்

நுவரெலியா மாவட்டம் ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில், 35 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த கற்பாறை பேருந்தின் மீது விழுந்துள்ளது.

இதன்போது, பேருந்தின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். அவரைப் பொலிஸாரும் பேருந்துப் பயணிகளும் இணைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதும், அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் பேருந்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக மலைப்பகுதியிலிருந்து பாறை உருண்டு விழுந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முத்தன் சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை