திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி – பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று விளக்கேற்ற இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குறித்த மலையில் தீபம் ஏற்ற கடந்த 2025 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அன்று குறித்த தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. […]



