ட்ரம்பிற்கு முன்னதாக சீனாவை சென்றடைந்த அராக்சி!
தெஹ்ரான் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே நடைபெற்று வரும் ராஜதந்திர ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று சீனாவுக்குப் பயணம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது அராக்சி தனது சீனப் பிரதிநிதியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்து விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர், மே 14 முதல் தொடங்கும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் சீனாவின் தலைவர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ள நிலையில் அராக்சியின் இந்த விஜயம் வந்துள்ளது.
இதேவேளை ட்ரம்ப் முன்னதாகவே சீன அதிபரை சந்திக்க திட்டம் தீட்டியிருந்தார். இருப்பினும் ஈரானுடனான போர் காரணமாக இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.




