காங்கிரஸுடன் கூட்டணி : த.வெ.க எடுக்கப்போகும் முடிவு என்ன?
தமிழக வெற்றிக்கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும் தனிப் பெரும்பான்மை இல்லாதமையால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதுடன், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.
தற்போது த.வெ.க ஆட்சியமைக்க 10 இடங்கள் தேவை. இதனைப் பெற கூட்டணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சி தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால் ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிகளும் அதற்கு சாதமான சமிக்கைகளையே வெளிப்படுத்துகின்றன.
இதற்கிடையே தவெக 5 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.





