தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் நாளை மறுதினம் பதவியேற்பு
தவெக தலைவர் விஜய் நாளை மறுதினம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை தவெக சட்டமன்றக் குழு தலைவராகவும் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




