பிரான்ஸில் வட்டியில்லா வீட்டுக்கடன் திட்டம் – யார் தகுதிபெறுவார்கள்?
பிரான்ஸில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் முகமாகவும், இளம் குடும்பங்கள் சொந்த வீடுகளை வாங்கும் வகையிலும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு புதிய குழந்தை பிறக்கும்போதும் அந்த குடும்பங்கள் வட்டியில்லா வீட்டுக் கடன்களை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த திட்டத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டமானது ஏற்கனவே குழந்தையை எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களுக்கும், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்காகவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை பிரான்ஸில் கடந்த 2025-ஆம் ஆண்டில் 6 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.




