பொழுதுபோக்கு

தம்பியை அடுத்து அண்ணனுடனும் ஜோடி சேர்ந்த அதிதி சங்கர்

‘விருமன்’, ‘மாவீரன்’ படங்களுக்குப் பிறகு நடிகை அதிதி ஷங்கர் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் தற்போது அதர்வா முரளியுடன் ஜோடி சேர உள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற முத்திரையோடு நடிகை அதிதி சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய துறுதுறு நடிப்பாலும், பாடும் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்தார் அதிதி. நடிகர் கார்த்தியோடு ‘விருமன்’ படத்திலும் பின்பு சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்திலும் ஜோடி சேர்ந்தார்.

இப்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் இளையமகன் ஆகாஷ் முரளியுடன் படத்தில் நடித்தார். தம்பியைத் தொடர்ந்து அண்ணனுடன் இப்போது படத்தில் நடிக்கிறார் அதிதி. இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

💃💖💃Aditi shankar 💃💖💃 Images • +917449218842 (@326428645k) on ShareChat

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘சிவா மனசுல சக்தி’ போன்ற நகைச்சுவைப் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குநர் எம். ராஜேஷ். இப்போது அதிதி-அதர்வா நடிக்கும் படம் நியூ ஏஜ் எண்டர்டெயினராக உருவாகிறது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார்.

Aditi Shankar: Navaratri Series Photoshoot of Viruman Actress

படம் குறித்து இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​”காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்தப் படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

தற்போது ஜெயம் ரவியின் படப்பணியில் ராஜேஷ் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் விரைவில் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content