வட அமெரிக்கா

அமெரிக்காவிலிருந்து ஜப்பான் நோக்கி புறப்பட்ட விமானத்தில் இருந்து கழன்று விழ்ந்த சக்கரம்

அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் டயர் ஒன்று தனியாக கழன்று விழுந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானின் ஓசாகா விமான நிலையத்திற்கு இந்த விமானம் பயணிக்க இருந்தது. அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை மதியம் 1:20 மணிக்கு அந்த விமானம் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து கிளம்பியது.

டயர் விழுந்ததில் 5க்கும் மேற்பட்ட கார்கள் சேதம்

கிளம்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் டயர் ஒன்று திடீரென கழன்று விழுந்தது. வானிலிருந்து கீழே விழுந்த இந்த டயர், அங்கிருந்த வாகனம் நிறுத்துமிடத்தில் விழுந்தது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் பார்க்கிங் பகுதியில் இரும்பு வேலிகள் சேதம் அடைந்தது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் விமானிகள் அவசரமாக விமானத்தை மீண்டும் தரையிறக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அருகில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர் தயாராக இருந்தனர். இருந்த போதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 249 பயணிகளும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பினர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்