வட அமெரிக்கா

சுற்றுலா முடித்து நாடு திரும்பிய கனடிய தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கனடாவில் தம்பதி தம்பதியினர் விசித்திரமான அனுபவம் ஒன்றை எதிர் நோக்க நேரிட்டுள்ளது.

12 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய குறித்த தம்பதியினர் தமது காரில் சிலர் தங்கி இருந்ததனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீடு திரும்பி காரை பார்த்த போது அந்த காரில் பல்வேறு பொருட்கள் காணப்பட்டதாகவும் எல்லா இடங்களிலும் குப்பைகள் போடப்பட்டிருந்ததாகவும் தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

தமது காரை, யாரோ குடியிருப்பாக மாற்றி உள்ளனர் என்பது தெளிவானது என குறிப்பிடுகின்றனர். வாகனம் சேதமடைந்து இருந்ததாகவும் Kayla Duplantis-Whitewick தெரிவிக்கின்றார்.எனினும் தாங்கள் வீடு திரும்பிய போது காரில் எவரும் இருக்க இருக்கவில்லை என குறிப்பிடுகின்றார்.

காலையில் மீண்டும் காரை சென்று பார்த்தபோது ஒரு தம்பதியினர் உள்ளே இருந்ததை கண்டதாகவும் உடனடியாக பொலிஸாருக்கு இது குறித்து அறிவித்ததாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் அந்த இடத்திலிருந்து தப்பி சென்று விட்டதாகவும், குறித்த ஆணை பொலிஸார் கைது செய்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த காரை தாங்கள் வாங்கியதாகவும் இது தமது கனவு கார் எனவும் அந்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர் வாகனம் அதிக அளவில் வீதியில் செலுத்தப்படவில்லை என குறிப்பிடுகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content