ஐரோப்பா

பயிற்சியின் போது மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய போர் விமானம்

ரஷ்யாவுக்குச் சொந்தமான சுகோய் எஸ்யு-34 ரக போர் விமானம் கோகசஸ் மலைப்பகுதிகளில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்தோர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவலை ரஷ்யத் பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை.

இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் அதன் விளைவாக தரையில் பொருட்சேதம் ஏற்படவில்லை என்றும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்