உலகம்

பெலாரஸில் 25 அரசியல் கைதிகள் விடுவிப்பு

பெலாரஸ் நிறுவனங்கள் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியமைக்கு பதிலாக, பெலாரஸ் 25 அரசியல் கைதிகளை விடுவித்துள்ளது.

“நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் பேச்சுவார்த்தைகள் மூலம் “கூடுதல் நபர்களின் விடுதலை மற்றும் கூடுதல் தடைகள் நீக்கம்” சாத்தியமாகலாம் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2022-ல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குத் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த ரஷ்யாவை அனுமதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் பெலாரஸ் மீது தடைகளை விதித்தன.

தற்போது, ​​வர்ணம் தயாரிப்பு நிறுவனமான ‘லகோக்ராஸ்கா’ (Lakokraska) மற்றும் வனத்துறை சார்ந்த குழுவான ‘பெல்லெஸ்பம்ப்ரோம்’ (Bellesbumprom) ஆகியவற்றின் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்