ஒன்று திரள்வோம் – பலத்தை காட்டுவோம்: ஈரான் மக்களுக்கு அழைப்பு
மறைந்த உச்ச தலைவர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று ஈரான் சபாநாயகர் Mohammad Bagher Ghalibafஅழைப்பு விடுத்துள்ளார்.
“சனிக்கிழமை தொடங்கும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற பக்கத்தை எழுதுமாறு அனைத்து ஈரான் மக்களையும் நான் அழைக்கிறேன்” என்று Ghalibaf வலியுறுத்தியுள்ளார்.
“பழிவாங்கலுக்கான தேசத்தின் குரல் உலகம் முழுவதிலும் உள்ளவர்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய போரின் முதல் நாளான பெப்ரவரி 28 அன்று, ஈரானின் அப்போதைய உச்ச தலைவராக இருந்த 86 வயதான அலி கமேனி, தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு இஸ்லாமிய புரட்சியை வழிநடத்திய அயதுல்லா ருஹொல்லா கொமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, 1989 முதல் கமேனி ஈரானை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




