ஐரோப்பா

லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனம் மீதான சைபர் தாக்குதல் – இருவர் கைது

லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த இரண்டு ஹேக்கர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தலா  ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன்  இந்தத் தாக்குதலைச் சரிசெய்ய £29 மில்லியன் ($39.16 மில்லியன்) வரை செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதான தல்ஹா ஜுபைர் (Thalha Jubair)  மற்றும் 18 வயதான ஓவன் ஃப்ளவர்ஸ்  ( Owen Flowers) ஆகியோரே மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

ஜுபைர் இந்த ஹேக்கிங்கை நேரலையாக ஒளிபரப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த காணொளி காட்சி குற்றவாளிகளுக்கு எதிரான முக்கிய சாட்சியாக சமர்ப்பிக்கப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட பின்னரும் ஃபிளவர்ஸ் சிறையில் இருந்து தொடர்ந்து ஹேக் செய்ய முயன்றார் என்றும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் சேவை மற்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையுடன் தொடர்புடைய டொமைன்களை அணுகுவதற்கான தேடல் சொற்களையும் முயற்சிகளையும் கருவிகள் காட்டின என்றும் ஃபென்ஹால்ஸ் (Fenhalls) கூறினார்.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்