செய்தி பொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ குறித்து மகிழ்ச்சியான செய்தி…

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது.

தமிழக முதல்வர் தளபதி விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய மாத நடுப்பகுதியில் படம் திரைக்கு வரும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது.

எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இழுபறி நீடித்தது.

இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படம் ஆன்லைனில் கசிந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த சர்ச்சை வரும்காலப்பகுதியில் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதிகாரம் இருக்கவில்லை.

தற்போது விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், சிக்கல்கள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இன்று ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள தகவலின் படி, ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் அடுத்த 3 நாட்களுக்குள் கிடைக்கும் என்றும் இப்படத்தை இந்த மாதமே வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ படம் ஜூலை 16 அல்லது ஜூலை 23 ஆகிய திகதிகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி