ஐரோப்பா

ரஷ்யாவில் எரிபொருள் பற்றாக்குறை – மக்கள் அதிருப்தி

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் அங்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், விவசாயிகள் உரிய நேரத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் போய்விடுமோ என கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருமாறு கெய்வ் மொஸ்கோவை வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே ரஷ்யாவில் எண்ணெய் பற்றாக்குறை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக எரிபொருளை எவ்வாறு உறிஞ்சுவது என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கானோர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாக iPhones.ru என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும்  எரிபொருள் தட்டுப்பாட்டை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்