இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது கொரியா

இலங்கைக்கான கொரிய தூதுவர் Miyon Lee, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கைக்கான கொரிய தூதுவர் Miyon Lee, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி மற்றும் பரிமாற்றத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இலங்கை முப்படையினருக்கு கொரியாவில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல், பாதுகாப்புத் துறை தொடர்பான சர்வதேச கண்காட்சிகள், மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்தும் கவனம்
செலுத்தப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை