1000 நாட்கள் கடந்தும் காசாவில் தொடரும் அவலம்
காசாவில் கடந்த ஆயிரம் நாட்களாகத் தொடரும் போர் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய தாக்குதல்களால் இந்தப் பகுதியின் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பான்மையான நிலப்பரப்பு ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் 72 ஆயிரத்து 956 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அடங்குவர்.
ஒரு லட்சத்து 73 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 947 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மிகக் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் கட்டாய இடப்பெயர்வுகள் காரணமாக காசாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஊடகவியலாளர்கள் மற்றும் மீட்புப்பணி வீரர்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் இலக்குவைக்கப்பட்டுள்ளனர்.




