ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டனில் பேருந்து ஓட்டுநர்கள் பணிப்புறக்கணிப்பு – முழுமையான தகவல் இதோ

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் லண்டனில் 1500 பேருந்து ஓட்டுநர்கள் இந்த வாரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் வெப்பமான காலநிலையில் நிலவும் பணிச்சூழல் காரணமாக  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். யுனைட் தொழிற்சங்க உறுப்பினர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 4 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி வரை விட்டுவிட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பின்வரும் சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19, 29, 34, 41, 66, 67, 76, 102, […]

செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 18, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 55 வது நாளான இன்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 08 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 109 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 582 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

உலகம்

சீனாவில் பிரபலமாகி வரும் செயற்கை சீற்றங்கள் – குவியும் சுற்றுலா பயணிகள்

  • August 18, 2026
  • 0 Comments

சீனாவில் இயற்கை சீற்றங்களை செயற்கையாக அனுபவிக்கும் புதுவித கலாச்சாரம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வருகிறது. ‘டார்க் டூரிசம் என அழைக்கப்படும் இந்த சாகசம் ஹங்சோ நகரில் அமைந்துள்ளது. பிரபல சீனப் பெண் மற்றும் ஆண் சாகசப் பயணிகளான சாங் சின்யு மற்றும் லியாங் ஹாங் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த மையம், குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மையத்தில் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் செயற்கைப் புயல், கனமழை, மற்றும் திடீர் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு […]

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்

  • August 18, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி,   இலங்கை சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சட்டமா அதிபர் எதிர்வாதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அடிப்படையில் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் […]

ஐரோப்பா

உக்ரைன் போரில் குதித்த பிரித்தானியா : எச்சரிக்கும் ரஷ்யா

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியா தயாரித்த இரண்டு ட்ரோன்கள் ரஷ்யாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. பிரித்தானியா போரை மேலும் தீவிரப்படுத்துவதாகவும், ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பிரித்தானிய உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்திய ட்ரோன்கள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரித்தானியா […]

உலகம்

நைஜீரியாவில் நள்ளிரவில் குடியிருப்புவாசிகள் மீது தாக்குதல் -25 பேர் பலி

  • August 18, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் மத்திய பிளாட்டோ மாநிலத்தில் உள்ள கிராமமொன்றின் மீது நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக மாநில அதிகாரிகளும், குடியிருப்புவாசிகளும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், பிளாட்டோ மாநிலத்தில் நிலவும் தொடர்ச்சியான பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது. அங்கு விவசாய சமூகங்களுக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையிலான பதட்டங்கள் பெரும்பாலும் பழிவாங்கும் வன்முறையாக மாறி, மக்கள் இறப்பதற்கும், இடம்பெயர்வதற்கும், வீடற்றவர்களாக ஆவதற்கும் காரணமாகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் வீடு வீடாகச் சென்று, அரிவாள்களால் குடியிருப்பாளர்களைக் கொன்றதாகவும், பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும் […]

ஐரோப்பா

எட்னாவில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர் பலி

  • August 18, 2026
  • 0 Comments

சிசிலியில் உள்ள எட்னா மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். 29 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. எரிமலையின் மீது கடுமையான இடியுடன் கூடிய புயல் வீசியபோது அந்த நபர் மலையேற்றத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மின்னல் தாக்கியது தொடர்பான தகவல் கிடைத்ததும், அவர் உடனடியாக தீயணைப்பு வீரர்களின் ஹெலிகாப்டர் மூலம் கட்டானியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியாமல்போனதாக அதிகாரிகள் […]

உலகம்

திரிபோலியில் 09 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு – தொடரும் தேடுதல் வேட்டை

  • August 18, 2026
  • 0 Comments

லிபிய தலைநகர் திரிபோலியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் 09 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  உயிரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபோலியிலிருந்து சுமார் 22 கி.மீ (14 மைல்) தொலைவில் உள்ள தஜூராவிலிருந்து Tajoura உடல்கள் மீட்கப்பட்டதாக, செஞ்சிலுவைச் சங்கக் கிளை தெரிவித்துள்ளது. படகில் சுமார் 19 பேர் பயணம் செய்ததால், மேலும் பல உடல்கள் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் […]

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் " (Protection of the State from Terrorism Act) என்ற பெயரிலான புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்”: சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்க ஒப்புதல்

  • August 18, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் ” (Protection of the State from Terrorism Act) என்ற பெயரிலான புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில், குறித்த விடயங்களுக்குரிய அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான […]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

  • August 18, 2026
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (Sri Lanka Rupavahini Corporation) அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு மாறாக, மேலதிகமாக ஆறு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே விசாரணை இடம்பெறுகின்றது. இது தொடர்பில் […]