கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை
கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இந்த செயற்பாடு நாளைய தினம் (04.07) முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலும், அத்துடன் பத்தரமுல்ல, பெலவத்த, ஹொக்கந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹன, மடிவெல, நுவகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகவத்த, அங்கோட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, கடுவெல, மகாரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தல ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
முல்லேரியாவ மின்கட்டமைப்பு துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே இந்த நீர் விநியோக நிறுத்தத்திற்குக் காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.





