இந்திய தூதுவருடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு: அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தக் கலந்துரையாடலின்போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதன் அவசியம் […]













