ஐரோப்பா

பிரெக்ஸிட்டால் நபர் ஒருக்கு 3200 பவுண்ட்ஸ் இழப்பு : மீண்டும் சேருவதே ஒரே வழி

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் நீல் கின்னாக் (Neil Kinnock),   தெரிவித்துள்ளார்.

அதுவே நாட்டிற்கு “செய்ய வேண்டிய ஒரே தேசபக்தி செயல்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரெக்ஸிட் ஒரு “தவிர்க்கக்கூடிய பேரழிவு” என்று விவரித்த அவர், விரிவான பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாச்சார சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதில் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் £3,200 பவுண்ட்ஸ் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ’சுட்டிக்காட்டினார்.

சுங்க ஒன்றியம், ஒற்றைச் சந்தை ஆகியவற்றில் மீண்டும் இணைவதையோ அல்லது தொழிலாளர்களின் தடையற்ற நடமாட்டத்தை அனுமதிப்பதையோ தடுக்கும், திட்டங்களை கட்டுப்படுத்தப்பட வேண்டாம் என்றும் அவர் புதிய பிரதமரிடம்  வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறும் ஒரு பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் கணிசமான பெரும்பான்மையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர வாக்களிக்கக்கூடும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இளைய தலைமுறையினரின் கருத்துக்களைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்