உலகம்

குடியேறிகளை வரவேற்றுப் பாதுகாக்குமாறு போப் லியோ வேண்டுகோள்!

குடியேறிகளை வரவேற்றுப் பாதுகாக்குமாறு அமெரிக்கர்களிடம் போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தனது தாய் நாட்டிற்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கையை மனிதாபிமானமற்றது என விமர்சித்ததை தொடர்ந்து ட்ரம்பின் கோபத்திற்கு ஆழான லியோ தற்போதும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உலகம் “மேலும் மனிதாபிமானத்துடன்” செயல்பட வேண்டும் என்றும், தப்பி ஓடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேநேரம் மத்திய தரைக் கடலை கடந்து லம்பேடுசாவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு உதவுமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிரைப் பாதுகாக்கும் கத்தோலிக்க விழுமியத்தில் “குடியேறிகளை வரவேற்பது, பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கு உதவுவதும்” அடங்கும் என்று லியோ கூறினார்.

“(குடியேறிகளை) கருணையுடனும் தாராள மனத்துடனும் வரவேற்பது என்பது ஒரு தர்மச் செயல் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கண்ணியத்தை அங்கீகரிப்பதும் ஆகும்,” என்றும் லியோ மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்