ட்ரம்ப் நிர்வாகத்தை தட்டிக்கேளுங்கள்: அமெரிக்க மக்களிடம் ஈரான் கோரிக்கை!
ஈரான்மீது அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள போரை அந்நாட்டு மக்கள் தட்டிக்கேட்க வேண்டுமென ஈரான் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலானது எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பாகும் என ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baqaei
சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஈரானின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
இதனை வலியுறுத்தியே ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனது எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் உடனடித் தாக்குதல் நடத்தப்போகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க செனட்டர் வெளியிட்ட தகவலையும் Esmaeil Baqaei
பகிர்ந்துள்ளார்.





