உலகம் செய்தி

லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார்.

நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, லெபனான் மீது நடைபெறும் குண்டுவீச்சுகளை நிறுத்துவது இஸ்ரேலின் (Israel) கடமை என்றும் சீன தூதர் வலியுறுத்தினார்.

ஐ.நா. செயலகம் ஜூன் மாதத்தில் அறிக்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதன் பின்னரே சீனா தனது இறுதி நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி