உலகம்

ஆஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இந்தியர்கள் பாரிய அளவில் அதிகரிப்பு!

குடியேற்றத்திற்கு எதிரான தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தியர்கள் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவாக உருவெடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஜூன் 30 வரை சுமார் 971,020 இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 5.2 சதவீதத்தை பிடிப்பதாகவும், இது இங்கிலாந்தில் பிறந்த 970,950 பேரை விட சற்று அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய வம்சாவளியினரின் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து பிரஜைகளின் எண்ணிக்கை சீராகக் குறைந்துள்ளது.

732,000 பேருடன் சீனா மூன்றாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து நியூசிலாந்து 638,000 பேருடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

பிலிப்பைன்ஸ், வியட்நாம், தென்னாப்பிரிக்கா, நேபாளம், இலங்கை மற்றும் மலேசியாவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் சொற்ப அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!