துருப்புக்களை திரும்பப் பெறும் அமெரிக்கா – ஜெர்மனி விடுத்துள்ள அழைப்பு!
ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்கான அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கரிசனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவில் அமெரிக்க வீரர்கள் இருப்பது “நமது நலனுக்கும் அமெரிக்காவின் நலனுக்கும் உகந்தது” என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி உட்பட ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா படைகளைத் திரும்பப் பெறும் என்பது முன்கூட்டியே கணிக்கக்கூடியதாகவே இருந்தது” என்றும் அவர் மேலும் கூறினார்.
“ஐரோப்பியர்களாகிய நாம் நமது பாதுகாப்பிற்காக அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.





