செய்தி தமிழ்நாடு

மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம் – உதயநிதி 

  • May 4, 2026
  • 0 Comments

“மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள். வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேப்பாக்கம் தொகுதி மக்களுக்காக […]

உலகம்

மயோன் எரிமலை வெடிப்பு : மக்கள் வெளியேற்றம்!

  • May 4, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் உள்ள மயோன் எரிமலை நேற்று வெடித்ததை தொடர்ந்து மணிலாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலையிலிருந்து 6 கி.மீ. சுற்றளவிற்கு அபாயமண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்பகுதியில் நிலச்சரிவுகள் மற்றும் எரிமலைக்குழம்புப் பாய்வுகள் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எரிமலை வெடிப்பு குறித்து அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்த நிலையில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

யாழில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி கொண்டாட்டம் 

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொடி பறக்கவிடுதல், வெடிகளை கொழுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரத்தில் கொடிகளை தாங்கியவாறு, விசில் ஊதி, வெடி கொழுத்தி வெற்றி கொண்டாடப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 76, அதிமுக கூட்டணி 50 தொகுதிகளை வசப்படுத்துகின்றன. திமுக 2-ம் இடத்தில் உள்ளது. முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் கொளாத்தூரில் தோல்வியை சந்தித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது […]

இந்தியா செய்தி

தவெக வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பான செயல்பாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார். “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் நிற்போம்.” “தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (TVK) சிறப்பான செயல்பாட்டுக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், மக்களின் […]

விளையாட்டு

வேலை செய்துக்கொண்டே கிரிக்கெட் பார்க்கும் அரிய வாய்ப்பு – பிரித்தானியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

  • May 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பலரும் தற்போது வீட்டிலிருந்தே பணிபுரியும் நிலையில், சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப் (Surrey County Cricket Club) புதிய முயற்சியாக இரசிகர்களையும் பணிபுரிபவர்களையும் மைதானத்துக்கு ஈர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தென் லண்டனில் அமைந்துள்ள 180 ஆண்டுகள் பழமையான கியா ஓவல் (The Kia Oval) மைதானத்தில், “Work From Oval” என்ற பெயரில் வேலை செய்யும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வலுவான Wi-Fi வசதி, மின்சார இணைப்பு மற்றும் ஆட்டத்தை தெளிவாகக் காணும் வசதியுடன் கூடிய மேசைகள் […]

இலங்கை செய்தி

இணையக் குற்றங்கள் – 120 வெளிநாட்டினருக்கும் விளக்கமறியல்

  • May 4, 2026
  • 0 Comments

இணையக் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டினர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இணையத்தைப் பயன்படுத்தி பணம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த 120 வெளிநாட்டு கடத்தல்காரர்கள் நேற்று (03) வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது தப்பிச் சென்ற 12 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் உலகின் பல […]

ஐரோப்பா செய்தி

பிரிஸ்டல் வெடி விபத்து – மக்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அறிவிப்பு

  • May 4, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த வெடி விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. இதன்போதுஇரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படதா நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தில் தடயவியல் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த வீட்டில் இடம்பெற்ற […]

உலகம் செய்தி

கப்பல்மீது ஏவுகணை தாக்குதலா? அமெரிக்கா மறுப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. எனினும், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய கடற்படையின் எச்சரிக்கைகளை அமெரிக்கப் படைகள் அலட்சியப்படுத்தியதால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் […]

இந்தியா

“சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது” : தேர்தல் குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து!

  • May 4, 2026
  • 0 Comments

‘காமராஜர் தோற்றார், மு.க.ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், பிரகாஷ் ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்’ […]

ஐரோப்பா செய்தி

சிறந்த பயணங்கள் வாரம்” ஆரம்பம் – மாற்றுப் போக்குவரத்துக்கு மக்களை ஊக்குவிக்க முயற்சி

  • May 4, 2026
  • 0 Comments

“சிறந்த பயணங்கள் வாரம்” (Better Journeys Week) மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தொழிலாளர்கள் தங்கள் தினசரி பயணங்களில் எளிய மாற்றங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். முன்னர் “மாற்றுப் போக்குவரத்து வாரம்” என அறியப்பட்ட இந்த வருடாந்திர திட்டம், கெர்ன்சி (Guernsey), ஜெர்சி (Jersey) மற்றும் ஐல் ஆஃப் மேன் (Isle of Man) ஆகிய இடங்களில் மே 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. இந்த பிரசாரத்தின் நோக்கம், மக்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்து, பேருந்து, […]