செய்தி தமிழ்நாடு

மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம் – உதயநிதி 

“மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள். வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேப்பாக்கம் தொகுதி மக்களுக்காக இன்னும் கடுமையாக பணியாற்றுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 34 தொகுதிகளில் வெற்றியும், 77 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு 76 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 50 தொகுதிகளும் மட்டுமே வசமாகியுள்ளன.

இதனிடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் 62,992 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட செல்வம் 55,852 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி