மயோன் எரிமலை வெடிப்பு : மக்கள் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸில் உள்ள மயோன் எரிமலை நேற்று வெடித்ததை தொடர்ந்து மணிலாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எரிமலையிலிருந்து 6 கி.மீ. சுற்றளவிற்கு அபாயமண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்பகுதியில் நிலச்சரிவுகள் மற்றும் எரிமலைக்குழம்புப் பாய்வுகள் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எரிமலை வெடிப்பு குறித்து அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்த நிலையில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





