ஐரோப்பா செய்தி

பிரிஸ்டல் வெடி விபத்து – மக்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அறிவிப்பு

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த வெடி விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது.

இதன்போதுஇரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்

வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படதா நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சம்பவ இடத்தில் தடயவியல் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த வீட்டில் இடம்பெற்ற குடும்பப் பிரச்சினை தொடர்பாக பொலிஸார் அங்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த “சந்தேகத்திற்கிடமான” வெடிவிபத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடம் இன்னும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் தடயவியல் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

காவல்துறை, இந்தச் சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்றும், ஆனால் இது “சிக்கலான மற்றும் நுணுக்கமான விசாரணையாக” தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாதுகாப்பு வளையம் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரிஸ்டல் நகர சபை தொடர்ந்து உதவி வழங்கி வருகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி