உலகம் செய்தி

கப்பல்மீது ஏவுகணை தாக்குதலா? அமெரிக்கா மறுப்பு!

ஹார்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.

எனினும், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.

ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானிய கடற்படையின் எச்சரிக்கைகளை அமெரிக்கப் படைகள் அலட்சியப்படுத்தியதால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பிராந்தியத்தில் நிலவும் கடுமையான பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.

எனினும், இந்த தாக்குதல் குறித்த தகவலை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமது நாட்டு கப்பல்மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், இப்பகுதியில் கடற்படைத் தடையை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி