தனது அமெரிக்கப் பயணத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா செய்தி

தெலுங்கானா முதல்வருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு

  • August 21, 2026
  • 0 Comments

தனது அமெரிக்கப் பயணத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தற்போது லண்டனில் உள்ள ரேவந்த் ரெட்டி, அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஆகஸ்ட் 30-ஆம் திகதி அவர் ஹைதராபாத் திரும்புவதாக இருந்தது. இந்நிலையில், ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால், அவர் ஆகஸ்ட் 23-ஆம் திகதியே லண்டனில் இருந்து ஹைதராபாத் திரும்பவுள்ளதாகத் தெலங்கானா […]

ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல் இலங்கை செய்தி

ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல்

  • August 21, 2026
  • 0 Comments

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது , அதிக ஒளி பாவனையால் நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண் பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றைப் பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர். கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் […]

யாழில்ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி காரணமாக கண் பாதிப்பு: 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை செய்தி

யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: 157 பேருக்கு கண் பாதிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளமையுடன், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், 'E1' குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. ஐரோப்பா செய்தி

இஸ்ரேலின் ‘E1’ குடியேற்றத் திட்டம்: ஐரோப்பிய நாடுகள் போர்க்கொடி

  • August 21, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், ‘E1’ குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமான இந்த நகர்வுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பாலஸ்தீனப் பகுதிகளின் நிலத்தொடர்ச்சியை (Territorial […]

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று தனது 94 ஆவது வயதில் காலமானார். செய்தி பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு

  • August 21, 2026
  • 0 Comments

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று தனது 94 ஆவது வயதில் காலமானார். செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் அளவில் அவரது உயிர் பிரிந்தது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் (1931) பிறந்தவர். தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் […]

புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

  • August 21, 2026
  • 0 Comments

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து வெளியேறவு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கர்மென் மொரேனோ (Carmen Moreno) , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தூதுவரை அன்புடன் வரவேற்ற பிரதமர், இலங்கை அண்மையில் முகங்கொடுத்த சவால்களின்போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒத்துழைப்பிற்குத் தனது தெரிவித்தார். குறிப்பாக ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையின்போதும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் […]

ஐரோப்பா

சுவிஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாரிய தீவிபத்து

  • August 21, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் 05 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் தூரக் கிழக்கில் உள்ள துசிஸ் என்ற இடத்தில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக அவசரக்கால பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

போரினால் பின்லாந்தை ஊடுருவும் விமானங்கள் – உளவுத்துறை எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியை ஊடுருவியிருக்கலாம் என பின்லாந்து அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வான்வெளி மீறல் எனச் சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு செயலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது,” என்று பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் Antti Hakkanen தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்தில், இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன. மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்லாந்து […]

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோ: பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது. இயற்கையாக நிகழும் இந்த சக்திவாய்ந்த பருவநிலை நிகழ்வு, உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துவதுடன் தீவிர வானிலை மாற்றங்களின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யக்கூடியது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் இதுவும் சேரும்போது, வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக 2027 […]

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அரசியல் இந்தியா செய்தி

தவெக அரசு வழங்கும் கார்களை நிராகரித்த திமுக எம்எல்ஏக்கள்

  • August 21, 2026
  • 0 Comments

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “ அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் எம்எல்ஏக்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த […]