ஐரோப்பா

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை பிரித்தானிய அரசாங்கம் இன்று கடுமையாக்கியுள்ளது.

தேர்தல்களில் வெளிநாட்டுப் பணம் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளுக்கு அமைய இனிமேல், அரசியல் வேட்பாளர்கள், வேட்பாளராவதற்கு முன்பு பெற்ற £2,230 பவுண்ட்ஸுக்கு மேற்பட்ட நன்கொடைகளை அறிவிக்க வேண்டும் என்றும், வேட்பாளராவதற்கு முந்தைய நிதி ஆதாரங்கள் அனைத்தும் முறையான மூலங்களிலிருந்து வந்தவை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கு ஆதரவான உரைகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதற்காக இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் , ‘ரிஃபார்ம் யுகே’ கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்து மறுஆய்வு செய்யவும்  அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகள், நாட்டின் ஜனநாயகத்தில் செல்வாக்கு செலுத்தவும் அதனைச் சீர்குலைக்கவும் முயற்சிப்பதாக எழுந்துள்ள கவலைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்