புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து வெளியேறவு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கர்மென் மொரேனோ (Carmen Moreno) , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தூதுவரை அன்புடன் வரவேற்ற பிரதமர், இலங்கை அண்மையில் முகங்கொடுத்த சவால்களின்போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒத்துழைப்பிற்குத் தனது தெரிவித்தார். குறிப்பாக ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையின்போதும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் […]













