உலகம்

பெலாரஸில் 25 அரசியல் கைதிகள் விடுவிப்பு

  • September 17, 2026
  • 0 Comments

பெலாரஸ் நிறுவனங்கள் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியமைக்கு பதிலாக, பெலாரஸ் 25 அரசியல் கைதிகளை விடுவித்துள்ளது. “நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பேச்சுவார்த்தைகள் மூலம் “கூடுதல் நபர்களின் விடுதலை மற்றும் கூடுதல் தடைகள் நீக்கம்” சாத்தியமாகலாம் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022-ல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குத் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த ரஷ்யாவை அனுமதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் பெலாரஸ் மீது தடைகளை விதித்தன. தற்போது, ​​வர்ணம் தயாரிப்பு நிறுவனமான ‘லகோக்ராஸ்கா’ […]

ஆஸ்திரேலியாவில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதற்காக புதிய அமுலாக்க நடவடிக்கைகளை தொழிலாளர் கட்சி (Labor) அரசு அறிவித்துள்ளது.  ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: புதிய திட்டம் அமுல்

  • September 17, 2026
  • 0 Comments

  ஆஸ்திரேலியாவில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதற்காக புதிய அமுலாக்க நடவடிக்கைகளை லேபர் அரசு அறிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச மாணவர்கள் காலவரையறையின்றி தங்குவதை தடுக்கும் வகையிலும் விசா விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த புலம்பெயர்வு விதிகளின் மாற்றங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) இன்று வெளியிட்டார். இதற்கமைய நிகர வெளிநாட்டு புலம்பெயர்வை (NOM) நடப்பு நிதியாண்டில் 2 லட்சத்து 45 ஆயிரமாகவும் , 2027-28 […]

ரஷ்யாவின் எரிசக்தி துறை, தனிநபர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் நிழற்படை (shadow fleet) கப்பல்களை இலக்காகக் கொண்டு, அந்நாட்டின் மீது தடைகளை விதிக்கும் புதிய சட்டமூலத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவுக்கு புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா: இந்தியாவுக்கும் ஆபத்து

  • September 17, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எரிசக்தி துறை, தனிநபர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் நிழற்படை (shadow fleet) கப்பல்களை இலக்காகக் கொண்டு, அந்நாட்டின் மீது தடைகளை விதிக்கும் புதிய சட்டமூலத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலமானது, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக […]

உலகம்

HIV தொற்று – ஃபிஜியில் தேசிய நெருக்கடி நிலை

  • September 17, 2026
  • 0 Comments

எய்ட்ஸ் தொற்றுநோயை  ஃபிஜி  அரசாங்கம் தேசிய நெருக்கடி நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு   எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 27 சதவீதத்தினால் அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடையே மட்டுமே காணப்பட்ட இந்தப் பாதிப்பு, தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அங்குள்ள 60 பெரியவர்களில் ஒருவர் இந்நோயுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் […]

இந்தியாவில் சட்டவிரோத கசகசா (அபின்) பயிர்ச்செய்கையைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுப் பாராட்டியுள்ளார். இந்தியா செய்தி

போதைப்பொருள் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்தது அமெரிக்கா

  • September 17, 2026
  • 0 Comments

இந்தியாவில் சட்டவிரோத கசகசா (அபின்) பயிர்ச்செய்கையைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுப் பாராட்டியுள்ளார். அதேவேளையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி நடைபெறும் 23 முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் (Presidential Determination), அமெரிக்க-இந்திய போதைப்பொருள் கொள்கைக் கூட்டமைப்பின் (United States-India Drug Policy Framework) […]

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த ஊரான வாத்நகரையும் (Vadnagar), அவரது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியையும் (Varanasi) இணைக்கும் வகையில் இரு சக்கர வாகன பேரணிகள் (Bike Yatras) நடத்தப்படவுள்ளன. இந்தியா செய்தி

பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால ஆட்சிப் பயணம்: நாடு தழுவிய மக்கள் தொடர்புப் பிரச்சாரம் ஆரம்பம்

  • September 17, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த ஊரான வாத்நகரையும் (Vadnagar), அவரது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியையும் (Varanasi) இணைக்கும் வகையில் இரு சக்கர வாகன பேரணிகள் (Bike Yatras) நடத்தப்படவுள்ளன. பிரதமர் மோடி 76-வது வயதில் இன்று அடியெடுத்து வைப்பதுடன், நாட்டின் ஆட்சித் தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, பாஜக சார்பில் வியாழக்கிழமை முதல் மாதம் முழுவதும் நாடு தழுவிய மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பாஜகவின் ‘சேவா சங்கல்ப் அபியான்’ (Seva Sankalp Abhiyan) செப்டம்பர் […]

உலகம்

ட்ரம்பின் உத்தரவை மீறி வட்டி விகிதங்களை உயர்த்த ஃபெடரல் ரிசர்வ் வங்கி முடிவு

  • September 17, 2026
  • 0 Comments

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன; விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இவை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக வலியுறுத்திய போதிலும், ஃபெடரல் ரிசர்வ் (Fed) வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த ஒருமனதாக முடிவெடிடுத்துள்ளது. இதன்படி வட்டி விகிதங்கள் 3.5 சதவீதம் முதல் 3.75 சதவீதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. “பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதாலும், நீண்ட […]

“சிகிச்சைக்காகவே ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார்; அவர் விசாரணையைத் தவிர்ப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை,” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். இலங்கை செய்தி

விசாரணைக்கு அஞ்சியா சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச?

  • September 17, 2026
  • 0 Comments

“சிகிச்சைக்காகவே ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார்; அவர் விசாரணையைத் தவிர்ப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை,” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஷிராந்தி ராஜபக்சவின் சிங்கப்பூர் பயணம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “மருத்துவ ஆலோசனையின்பேரில், சிகிச்சைக்காகவே ஷிராந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார். இதற்கான பயணத் திகதி ஏற்கனவே […]

உலகம்

நேபாள பேரிடர் – 07 சதவீதமானோரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன

  • September 17, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட்டவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களின் உடல்களில் வெறும் 7 சதவீதம் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளம் ஏற்பட்டு நாட்கள் பல கடந்துவிட்ட நிலையில், உயிர்பிழைத்தவர்களை கண்டுப்பிடிப்பதில் மீட்பு பணியாளர்கள் சோர்வடைந்துள்ளதுடன், நம்பிக்கையும் தளர்ந்துள்ளது. இந்த பேரிடரில் குறைந்தது 1,399 பேர் உயிரிழந்த நிலையில், 636 வெளிநாட்டினர் உட்பட சுமார் 5,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 1,206 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனித குலத்தையே அழிக்கும் AI – அடுத்தடுத்து பதவி விலகிய முக்கிய அதிகாரிகள்

  • September 17, 2026
  • 0 Comments

AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், இன்னும் சில ஆண்டுகளில் AI மனித குலத்தையே அழிக்கும் சாத்தியமுள்ளதாக முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர், ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா […]