செய்தி

புதிய தாக்குதலுக்கு தயராகும் ரஷ்யா : உளவுத்துறை எச்சரிக்கை

  • September 23, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு புதிய பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உடனான சந்திப்பு குறித்து டெலிகிராமில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவித்த அவர், புதிய வான்வழித் தற்காப்பு அமைப்புகளைப் பெறுவது தொடர்பாக உக்ரைன் தனது நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறினார். “உக்ரைன் மீது ரஷ்யா ஒரு […]

Breaking News இலங்கை முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் – குற்றவாளிகளுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் கடூழிய சிறை

  • September 22, 2026
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள 15 பேருக்கு தலா 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறை தண்டனை விதித்து மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு (Trial-at-Bar) நேற்று இந்த வழக்கின் விசாரணைகளை நிறைவு செய்த நிலையில் தீர்ப்பை அறிவித்தது. இதற்கமைய குற்றவாளிகளில் ஒருவருக்கு 260 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், நான்கு பேருக்கு 240 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், மேலும் ஐந்து பேருக்கு 220 ஆண்டுகள் […]

உலகம்

ஐ.நா சபையில் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பேச்சு – அவையை விட்டு இருநாடுகள் வெளியேறின

  • September 22, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும்போது இரண்டு நாடுகளின் தூதுவர்கள் வெளிநடப்பு செய்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஈரான் மீதான அவ்வப்போது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப் பேச தொடங்கியபோது ​​ஈரானியத் தூதுக்குழுவினர் வெளியேறினர்; அவர்களில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தார். ட்ரம்ப் உரையாற்றும்போது, “நான் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, அவர்கள் முன்பை விட மிகச் சிறந்த நாடாகத் தங்களை மீண்டும் கட்டியெழுப்ப […]

ஐரோப்பா

மென்செஸ்டரில் யூத சமூகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் – இருவர் கைது

  • September 22, 2026
  • 0 Comments

மென்செஸ்டர் பகுதியில்  யூத சமூகத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படும்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பயங்கரவாதச் சட்டம் 2000-இன் பிரிவு 41-இன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 வயதுகளில் உள்ள இரண்டு ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மென்செஸ்டரில் உள்ள நியூட்டன் தெருவில் கைது செய்யப்பட்டு, தற்போது லண்டன் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போதும் எந்த அச்சுறுத்தலும் இருப்பதாகத் தாங்கள் நம்பவில்லை என பொலிஸார் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் F-16 ரக போர் விமானம் விபத்து

  • September 22, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டால்ம் (Spangdahlem) விமானப்படை தளத்திற்கு அருகே, அமெரிக்க விமானப்படையின் F-16 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. பின்ஸ்பெல்ட் (Binsfeld) கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாவதற்குச் சற்று முன்பு விமானி அதிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடொன்றில் தீவிபத்து – நால்வர் உயிரிழப்பு

  • September 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் மெர்சிசைடில் Merseyside உள்ள பூட்டில் Bootle என்ற இடத்தில் அமைந்துள்ள வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த தீவிபத்து தொடர்பில் அவசரக்கால சேவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் தலைமை அதிகாரி நிக் சியர்ல் Nick Searle,  உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும், எட்டு தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குடியிருப்பாளர்களைத் தேடவும் தீயை […]

ஐரோப்பா

ஏர்ல் ஸ்பென்சரின் நினைவுக் குறிப்பிற்கு பின் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய மன்னர்

  • September 22, 2026
  • 0 Comments

இளவரசி டயானாவைப் பற்றிய ஏர்ல் ஸ்பென்சரின் Earl Spencer  நினைவுக் குறிப்பு வெளியான பிறகு, மன்னர் சார்லஸ் முதன்முறையாக ஸ்காட்லாந்தில் அரசப் பணிகளில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்தப் புத்தகம், டயானாவின் வாழ்நாளின்போதும், 1997-ல் அவர் இறந்த பிறகும், அவரிடம் மன்னர் நடந்துகொண்ட விதம் குறித்த பல குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியுள்ளது. அந்தத் துயரமான விபத்தைத் தொடர்ந்து, மன்னர் “நாம் அவளை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாகவும், அவர் “பேரானந்தத்தில் திளைத்திருந்தார்” என்றும் ஏர்ல் ஸ்பென்சர் குற்றம் […]

உலகம்

ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய புயல் – ஐவர் உயிரிழப்பு

  • September 22, 2026
  • 0 Comments

டுஜுவான் புயல் ஜப்பான் முழுவதும் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புயல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 06 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்ற அறிவுறுத்தலின் கீழ் உள்ளனர். மேலும் டோக்கியோ மற்றும் சுற்றியுள்ள மாகாணங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என்றும்  ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேநேரம் விமான […]

இலங்கை

அனுராதப்புர மாவட்டத்திற்கு நீர் விநியோகத் தடை

  • September 22, 2026
  • 0 Comments

அநுராதபுரத்தில் உள்ள பல பகுதிகளுக்கு நாளை (23) 8 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக நீர் வி நியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. கலவேவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நாளை (23) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும். நீர் விநியோகத் […]

ஐரோப்பா

சதர்ன் வாட்டர் நிறுவனத்திற்கு 2.4 மில்லியன் பவுண்ட்ஸ் அபராதம் விதிப்பு

  • September 22, 2026
  • 0 Comments

சதர்ன் வாட்டர் Southern Water  நிறுவனத்திற்கு பிராம்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பவுண்ட்ஸ் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2021-க்கு இடையில் கென்ட்டில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மாசுப்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகவே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் ஒரு டீசல் கசிவு ஆகியவை ஸ்வாலிக்ளிஃப் புரூக் Swalecliffe Brook, ஃபேவர்ஷாம் க்ரீக் Faversham Creek மற்றும் விட்ஸ்டபிள் துறைமுகத்தை மாசுபடுத்தியதுடன், சுமார் 70 மீன்களைக் கொன்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் […]